நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக காணப்படுகின்றது.அவர்களில் 748 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் 07 பேர் இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் எனவும் கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 369 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 62 பேரும், மருதானையில் 11 பேரும், கொழும்பு கோட்டையில் 20 பேரும், மற்றும் பாதுக்க பிரதேசத்தில் 14 பேரும், பன்னிப்பிட்டிய மற்றும் பிலியந்தலை பிரதேசங்களிலிருந்து தலா 09 பேரும் வெள்ளம்பிடிய பிரதேசத்தில் இருந்து 10 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 15 பேரும், யக்கலயில் 10 பேரும், ராகமயில் 13 பேரும், கடவத்தையில் 07 பேரும், தோம்பேவில் 06 பேரும் மற்றும் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து 08 பேரும் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில் களுத்துறை மாவட்டத்தில் 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் 65 பேர் மத்துகம பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் 23 பேரும், காலியில் 18 பேரும், யாழ்ப்பாணத்தில் 06 பேரும், அம்பாறையில் 15 பேரும் மற்றும் மாத்தறையில் 17 பேரும், நுவெரெலியாவில் 02 பேரும், குருநேகலில் 29 பேரும் மற்றும் அநுராதபுரத்தில் 14 பேரும், பொலன்னறுவையில் 06 பேரும், மாத்தளையில் 22 பேரும், புத்தளத்தில் 05 பேரும், வவுனியா ஹம்பந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா ஒருவரும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் 16,431 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஆண்டின் முதல் 26 நாட்களுக்குள் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 16,461 ஆக காணப்படுகின்றது.





