சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை காரணமாக இன்று விசேட போக்குவரத்து திட்டம்

0
482

73 ஆவது சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த விசேட போக்குவரத்து திட்டம் காலை 6.00 மணிமுதல் மதியம் 1.00 மணி வரை செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் நாளை அதிகாலை 4.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை குறித்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள பல வீதிகள் முழுமையாக மூடப்படுவதோடு மேலும் சில வீதிகளில் போக்குவரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கான சில மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.