நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்று தொடர்பான விபரம்

0
365

நாட்டில் 21 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் 711 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்திலிருந்து 236 பேரும்,கம்பஹா மாவட்டத்திலிருந்து 93 பேரும்,குருநாகலை மாவட்டத்திலிருந்து 74 பேரும் பதிவாகியுள்ளனர்.

மேலும் காலி மாவட்டத்திலிருந்து 63 பேரும்,கண்டி மாவட்டத்திலிருந்து 60 பேரும் மற்றும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 34 பேரும் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் பதிவாகியுள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4 ஆக காணப்படுகின்றது.அதன்படி யட்டியன்தோட்டை பிரதேசத்திலுள்ள 70 வயதுடைய பெண்,தேவபொல பிரதேசத்திலுள்ள 67 வயதுடைய பெண்,வல்கமுவ பிரதேசத்திலுள்ள 89 வயதுடைய பெண் மற்றும் மீகமுவ பிரதேசத்திலுள்ள 66 வயதுடைய நபர் ஆகியோருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களாவர்.

தற்பொழுது நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 66,409 ஆக காணப்படுகின்றது.அத்துடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக காணப்படுகின்றது.