100 ஆண்டுகளுக்கு பின் தடகளத்தில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!!!

0
421

நடப்பு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா என்ற வீரர் இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வென்றுக் கொடுத்துள்ளார்.

இவர் தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றார்.

அதன் பின்னர் இறுதி சுற்றிலும் முதல் வாய்ப்பிலேயே 87.03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிநதுள்ளதுடன் இரண்டாவது சுற்றிலும் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்றுக் கொடுத்துள்ளார்.