இலங்கையில் வாட்ஸப் பயனர்கள் தங்கள் கணக்குகளை இழக்கும் அபாயம்

0
609

இலங்கையில் வாட்ஸப் செயலியின் புதிய விதிமுறைகளை நிராகரிக்கும் பயனர்கள் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 15 ஆம் திகதிக்கு முன்பு வாட்ஸப்பின் தனியுரிமைக் கொள்கை மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள்,செய்திகளை அனுப்பவோ அல்லது செய்திகளை பெற்றுக் கொள்ளவோ முடியாது என வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு புதிய கொள்கை விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாத வாட்ஸப் பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அழைப்புக்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று வாட்ஸப் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வாட்ஸப்பின் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்காத பயனர்களின் கணக்குகள் ‘செயலற்றது’ என்று பட்டியலிடப்படுவதோடு குறித்த கணக்குகள் 120 நாட்களுக்கு பின் நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.