உலகிலேயே முதன் முறையாக முழுவதும் மஞ்சல் நிறத்திலான பென்குயின் படம் பிடிப்பு

0
521

உலகிலேயே முதன் முறையாக முழுவதும் மஞ்சல் நிறத்திலான பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மஞ்சல் நிறத்திலான பென்குயின்கள் அன்டார்டிகா அருகில் உள்ள தென் ஜார்ஜியா கடல் பகுதியில் காணப்பட்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த பொழுது வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயினுடன் மஞ்சல் நிறத்திலான பென்குயின் உலா வருவதை கண்டு புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அத்துடன் ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் காணப்படுவதை போன்று முதன் முதலாக பென்குயிலிலும் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.