தற்பொழுது உலகம் முழுவதிலும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காணப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்ற வாரம் வரையான காலப்பகுதியில் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் கடந்த வாரத்தில் 81 ஆயிரம் கொரோனா உயிரிழப்புக்கள் மற்றும் 2.7 மில்லியன் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குறித்த எண்ணிக்கையானது கடந்த வாரத்தில் 5 லட்சமாக குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் பகுதியிலும் கொரோனா வைரஸ் தொற்று 20 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.




