தடுப்பூசி ஆவணப் பரிசோதனை காரணமாக விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் தாமதம் ஏற்படக்கூடும்..!

0
327

பிரான்ஸில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு இரு வாரங்கள் சென்றுள்ளதா என்று பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்குரிய கடவுச்சீட்டு,பயணப்பொதிகள் போன்ற வழமையான பரிசோதனைகளுடன் தற்பொழுது பி.சி.ஆர் பரிசோதனை அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றுகள் ஆகியன பரிசோதனைக்கு உட்படுத்தபடவிருப்பதால்,விமான நிலையங்களில் பாரிய நெரிசல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அங்கு தற்பொழுது கோடை விடுமுறைக்கான விமானப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இனிவரும் மாதங்களில் ஐரோப்பிய விமான நிலையங்களுக்கிடையே பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸானது ஜுன் 9 ஆம் திகதி முதல்,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் உல்லாசப்பயணிகளை,நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய தடுப்பூசி ஏற்றிக் கொண்ட உல்லாசப் பயணிகள் எந்தவித கட்டுபாடுகளும் இன்றி பிரவேசிக்க முடியும் எனவும் குறித்த அனுமதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் அனுமதிக்கப்பட்ட பைசர், மொடோனா,அஸ்ட்ரா செனகா,ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுககு மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையங்களில் கொரோனா தொற்று பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.