
இந்தோனேசியாவின் சுலெவெசி தீவில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் மஜேன் மற்றும் மமஜு ஆகிய பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதால் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு மஜேனில் 637 பேரும் மமஜுவில் 25 பேரும் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லையெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





