உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ரொயிட்டர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் உலக மக்கள் தொகையில் 1.3 வீதமானோர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இதுவரையில் வெளியான அறிக்கைகளின் படி 100,881,388 தொற்றாளர்களில் 72,926,260 பேர் குணமாகியுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளவில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு நொடிகளிலும் ஒவ்வொரு நபர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைவதாக ரொய்ட்டர்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் உலகில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 668,250 எனவும் உலக இறப்பு விகிதம் 2.15 வீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





