மேற்கு அவுஸ்திரெலியாவின் பல பகுதிகள் முடக்கம்

0
530

மேற்கு அவுஸ்திரெலியாவின் பல பகுதிகளை முடக்குவதற்கு அங்குள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி மேற்கு அவுஸ்திரெலியாவில் பெர்த்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளப்படுத்தப்பட்டமையினாலே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மேற்கு அவுஸ்திரெலியாவின் 15 பிரதேசங்கள் நேற்று மாலை 6 மணிமுதல் வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு முழுமையாக மூடப்படுவதாக மேற்கு அவுஸ்திரெலியாவின் பிராந்திய தலைவர் மார்க் மெக்கோவன் தெரிவித்துள்ளார்