அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் அவசர காலநிலை அறிவிப்பு

0
590

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று அவசரகால நிலையை அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நியூயோர்க் நகரம் உட்பட நாட்டின் பிரதான நகரங்களின் கடும் பனிபொழிவுடன் பலத்த காற்று வீசியதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நியூயோர்க் நகரில் மணிக்கு 2 தொடக்கம் 4 அங்குலம் வரை பனி பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் நியூ ஜெர்சி கவர்னர் திங்களன்று முழு பொது போக்குவரத்து சேவையையும் நிறுத்தி வைத்தள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.