வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டிற்குள்

0
502

இன்றைய தினம் காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலளவில் ஜனாதிபதி மாளிகை முன்பாக ஒன்று திரண்ட மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் தற்போது ஜனாதிபதி செயலகத்தையும் மக்கள் கைப்பற்றி உள் நுழைந்துள்ளனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் நிலவும் நிலைமையை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும்அவசரமாக கூடி கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோர கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.