இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததோடு, அமைச்சர் மனுஷ நாணயக்கார அதனை வழிமொழிந்தார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்ததுடன் அதனை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன் அதனை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழிமொழிந்தார்.
இதனை அடுத்து நாளை (20) காலை 10 மணி வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதையடுத்து, டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.





