பிரபல மூத்த நடிகை விஜயலட்சுமி காலமானார்

0
253

பிரபல மூத்த நடிகை விஜயலட்சுமி காலமானார்.
`ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர் விஜயலட்சுமி.
இவர் பாரதிகண்ணம்மா தொடரில் சீசன் 1-ல் கண்ணம்மாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர்.
சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 70 வயதான விஜயலட்சுமியின் உயிர் நேற்று தூக்கத்திலேயே பிரிந்துள்ளது.
அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.