உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் நபர் சூதாட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கும் அவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. கணவன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தினமும் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் பணத்தை இழந்துள்ளார். இவரது குடும்பமும் வறுமையில் வாடியது. ஆனால் அவர் இதை பொருட்படுத்தாமல் தினமும் குடித்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவன் சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த பின்னர் அவர் கூறிய வார்த்தைகள் தான் மனைவியை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அன்றைய தினம் அந்த போதை நபர் தனது நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சூது விளையாட்டில் ஒரு கட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்து விளையாடி தோற்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த அவர் தனது நண்பருடன் உறவு கொள்ளுமாறு மனைவிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
Home இந்தியச் செய்திகள் நான் தோற்றுவிட்டேன் இவரோடு நீ உடலுறவு கொள்ள வேண்டும் என சொன்ன கணவனால் அதிர்ந்து போன...





