முல்லைத்தீவில் சம்பவம் இளம் பெண்னான தனது மனைவியை வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது !!
சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு வீட்டின் பின் பக்கமாக உள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு (10) ஆம் வட்டாரத்தை சேர்ந்த (23) வயதுடைய கீதா எனும் பெண் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த (23) வயதுடைய ஆணொருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் கடந்த 2 வாரமாக வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் உயிரிழந்த குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயிடம் நாளாந்தம் கதைத்து வருவதாகவும், கடந்த (21) ம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் திங்கட்கிழமை (23 ம் திகதி) மகளும் மருமகனும் வசித்து வந்த வீட்டிற்கு சென்று பார்த்ததையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டின் பின்புறமாக புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டதாகவும்,
இதனால் சந்தேகமடைந்த குறித்த பெண்ணின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன்
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு என சந்தேகித்ததால் இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





