காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

0
273

காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குடியிருப்புகள் உள்ள பகுதியை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாகவும் ஹமாஸ் அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளர்.

ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே அக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் இடம்பெற்று வருகின்றது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8,306 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் 3,457 குழந்தைகள், 2,136 பெண்கள் மற்றும் 480 முதியவர்கள் அடங்குவார்கள். அத்துடன் 31 ஊடகவியலாளர்கள் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்இ 21,048 பேர் காயமடைந்துள்ளனர். 1,050 குழந்தைகள் உட்பட 1 950 பேர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.