முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடன் துறக்க வேண்டும்

0
203

பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடன் துறக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் நம்பிக்கையை மீறுவது மிக மோசமான விடயம். பொது மக்களின் நம்பிக்கையை மீறியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அவ்வாறு உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த சபையில் அமர்வதற்கு எந்த உரிமையும் இல்லை.