மகளிர் 20க்கு20 உலகக் கிண்ணத்தை துபாயில் வைத்து வெற்றி கொண்ட நியூசிலாந்து அணியை, இந்திய அணி தமது சொந்த மண்ணில் வைத்து தோற்கடித்துள்ளது

0
120

2024 சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிர் 20க்கு20 உலகக் கிண்ணத்தை துபாயில் வைத்து வெற்றி கொண்ட நியூசிலாந்து அணியை, இந்திய அணி தமது சொந்த மண்ணில் வைத்து தோற்கடித்துள்ளது.

நியூஸிலாந்து மகளிர் அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

நியூஸிலாந்து மகளிர் அணி

 

இந்தநிலையில் நேற்று அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியி;ல் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 227 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து மகளிரை தோற்கடித்த இந்திய மகளிர் | Ind W Vs Nz W Odi

 

இதனையடுத்து துடுப்பாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 40.4 ஓவர்களில் 168 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.