உலகின் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

0
213

2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, இலங்கையின் (Sri Lanka) கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது.

அதன்படி, இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரஜைகள் உலகின் 44 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறலாம்.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு

இந்நிலையில், சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்.

 

உலகின் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Sri Lanka Place List World Most Valuable Passports

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறுவதோடு, அமெரிக்கா 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்.