பெண்கள், சிறுவர், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்!

0
218
பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின்  வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்   யாழ்ப்பாண மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன்  அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (07.11.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு.ஜே.பி.எஸ்.ஜெயசிங்க, அவர்களால், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி  வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அமைச்சினால் வழங்கப்பட்ட உதவி திட்டங்கள் மற்றும் ஏனைய வேலை திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும்  திட்டங்களை  முன்னெடுத்து செல்வதில் ஏற்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.மேலும், மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கோரிக்கைகள் அனுப்பப்படும் பட்சத்தில் சாதகமாக பரிசீலிப்பதாகவும் பணிப்பாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக (வாழ்வாதார செயற்பாடு) அமைச்சினால் வழங்கப்பட்ட நிதிசாா் சார் முன்னேற்றம் தொடர்பில்  பிரதேச செயலாளர் பிரிவுகளில்  களத்தரிசிப்பு  மேற்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில்  மாவட்டச் செயலக உதவி மாவட்ட செயலாளர், பெண்கள், சிறுவா் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு  அமைச்சின் உத்தியோகத்தர்கள்,       மாவட்ட பெண்கள் சிறுவர்கள் பிரிவின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பெண்கள்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.