இந்திய – இலங்கை கடற்படை அதிகாரிகள் நடத்திய விசேட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

0
193

பாக் வளைகுடா (Palk Bay), மன்னார் வளைகுடா உட்பட்ட கடல் பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து இந்திய –  இலங்கை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனை நேற்று முன்தினம் 6ஆம் திகதியன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனைக் கூட்டம், இலங்கையின் விஜயபாகு கப்பலில் நடைபெற்றதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமூக ஊடக இடுகை தெரிவித்துள்ளது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

 

இந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் ஆர்.கே. திங்ரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் அதிகாரி மற்றும் இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே குமார ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

 

இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகள் நடத்திய விசேட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் | Special Meeting Indian Sri Lankan Naval Officers

எனினும் இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவிலலை.