உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கைகள் நிறைவு

0
198

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிய வீடுகளுக்கு அஞ்சலில் விநியோகிக்கும் பணிகள் 2024.11.07 ஆம் திகதி முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை வெளிப்படுத்தி தமது வீட்டுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

IMG 20241112 WA0274