அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

0
178
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் ஐந்து லீட்டர் கசிப்புடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவழைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது குறித்த சந்தே நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.