தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வரும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த மாநாடு நேற்று (28) கொழும்பில் இடம்பெற்றது.
தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் தலைமையில், Climate Change and Occupational Safety and Health at Workplace” (பணியிடத்தில் காலநிலை மாற்றம் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முறை மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு துறை சார் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வர்த்தக மற்றும் கைத்தொழில் முகாமையாளர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் என 500 பேர் கலந்து கொண்டனர்.
அத்துடன், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜோனி சிம்ப்சன் (Joni Simpson) , அமைச்சின் மேலதிக செயலாளர் லால் சமரசேகர, தொழில் ஆணையாளர் நாயகம் அசோக ஜயசுந்தர மற்றும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பிக்கா அமரசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.





