புதிய தொழிநுட்பத்தினூடாக அறுவடை செய்யப்பட்ட மிகை உணவு வகைகளைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்பட்ட 21 வகையான உணவுப்பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று (12) காலை விவசாயத் திணைக்களத்தின் கன்னோறுவ மரபியல் வள பாதுகாப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பிரிவு, அதன் உணவு ஆராய்ச்சிப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது போன்ற ஒரு தயாரிப்பு அறிமுகப்படுத்துவது இதுவே முதற்தடவையாகும்.
விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி கமனி ரணதுங்க தலைமையில் இந்த உணவுப் பொருட்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.





