யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்

0
126
யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த நரடாசா நாகராசா (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 8ஆம் திகதி மகள் வீட்டுக்கு செல்வதற்காக கல்வியங்காடு – ஜமுனா வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தார். பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அந்த வீதியில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார்.  அவருக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது கல்வியங்காடு பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியபோது, குறித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் நின்ற குறித்த நபர்மீது தாக்கியது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையின் பின் 10.12.2024 அன்று வீடு சென்றுள்ளார். இருப்பினும் இன்று காலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.