யாழ்ப்பாணத்தில் ஆபத்தான பேருந்து சாரத்தியம் – அதிர்ச்சியில் பயணிகள்!

0
111
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
29 ශ්‍රී 7911 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட பேருந்தே இவ்வாறு வீதியில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளது.
பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் இவ்வாறு வீதியின் குறுக்கும் மறுக்குமாக பயணத்தில் ஈடுபட்டது. இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.