போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று பேரின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

0
206

இலங்கையில்  போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று பேரின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜாஎல மற்றும் மாலம்பே பகுதிகளில் இருந்த அவர்களின் சொத்துக்கள் மற்றும் காணிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடு ரொஸான், கவிந்து மதுரங்க மற்றும் ஹெட்டியாரச்சிகே சிறில் மூன்று பேரின் சொத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. யுக்திய பொலிஸ் தேடுதல் வேட்டையின் மூலம் இவ்வாறு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஜீப் வண்டிகள், வான், கார்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.