வடக்கு, – கிழக்கில் ஒரு இலட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் – அதை கடுமையாக மறுத்தார் அலி சப்ரி.

0
165

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் இரத்தக்களறியுடன் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட அல்லது சரணடைந்திருந்தனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தாய்மார் 2,750 நாட்களைக் கடந்து போராடி வருகின்ற நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ‘மிகவும் குறைவானவை’ என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

அரகலய மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான சட்டத்தரணியான அலி சப்ரி, ஜேர்மனிய அரச தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், காணாமல் போனவர்கள் தொடர்பில் நாட்டில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் 6,047 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.அது சில மேற்குலக நாடுகள் கூறும் அறிவிலித்தனம். இல்லை, அந்த 100,000 என்பது முற்றிலும் தவறானது. அது 6,047 மாத்திரமே” என அவர் கூறினார்.

அவரது இந்த கருத்து நம்பகத்தன்மையற்றது மற்றும் தீய உள்நோக்கம் கொண்டது என தமிழர்கள் கூறுகின்ற நிலையில், சர்வதேச அமைப்புகள் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மிக அதிக அளவில் குறிப்பிட்டுள்ளன.

“மக்களின் ஆயர்” என அறியப்படும் காலஞ்சென்ற முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அரச தரவுகள் மூலம், இறுதிகட்ட போரின் போது மாத்திரம் 146,679 பேர் காணாமல் போனார்கள் எனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஆயர் கூறிய எண்ணிக்கையைவிட மிக மிக குறைவான எண்ணிக்கையை தனது செவ்வியில் கூறியுள்ளார்.