எங்கள் மறதி தான் திரு ரணில் விக்ரமசிங்கே போன்ற பலருக்கு வாய்ப்பாக இருக்கின்றது

0
146
தமிழர்களை வெ*ட்டுவேன், கொ*ல்லுவேன் என அச்சுறுத்திய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ICCPR கீழ் நடவடிக்கை எடுக்க முகாந்திரமிருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
தமிழ் மக்களின் தலைகளை கொய்து களனிக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய மேர்வின் சில்வா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் தலை மீது கைத்துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
தொல்பொருள் திணைக்களம் ஊடாக இராணுவத்தின் உதவியுடன் அச்சுறுத்தி தமிழர் நிலங்களை அபகரித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
திருகோணமலை பொன்மலைக்குடா மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்த பிக்கு பாணமுரே திலகவன்ச தேரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து ஆளுநர் செந்தில் தொண்டைமானை மோசமாக அச்சுறுத்திய பிக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
குருந்தூர் மலையில் தமிழ்மக்களின் பொங்கல் நிகழ்வில் தமிழர்களை அச்சுறுத்திய கல்கமுவ சாந்தபோதி தேரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
நீதிமன்ற உத்தரவுகளை மீறி மாதவனை மயிலத்தமடுவில் குடியேறி கால்நடைகளை மிக மோசமாக அழித்து வரும் கும்பல் அப் பகுதிக்கு பயணம் செய்த சர்வ மத குழுவினரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து அச்சுறுத்திய போதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
முல்லைத்தீவு நீதிபதி திரு சரவணராஜா அவர்களை அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றியது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஆனால் இப்போது திரு ரணில் விக்ரமசிங்கே சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுகின்றார் .
தமிழர்களை அவர்கள் மீதான சகல அச்சுறுத்தலிருந்து காப்பாற்ற போவதாக கதை சொல்லுகின்றார்
ஒருபோதும் தமிழர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு இடமளிக்கவில்லை எனவும் புதிதாக கதைக்கின்றார்
எங்கள் மறதி தான் திரு ரணில் விக்ரமசிங்கே போன்ற பலருக்கு வாய்ப்பாக இருக்கின்றது
இனமொன்றின் குரல்