யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்கள்

0
154

இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிவான் முன்னிலையில்..

இதன் பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கைளிக்கப்படவுள்ளனர்.

மேற்படி 21 இந்திய கடற்றொழிலாளர்களும் இன்று (வியாழக்கிழமை) ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்