அமெரிக்கா: டிரம்ப் மீண்டும் அதிபராக வந்தால் ரஷ்யாவுக்கு சிக்கலா? ரஷ்ய மக்கள் கூறுவது என்ன?

0
215

உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை: ஒரு விஷயம் கொண்டாடப்படுவதற்கு மிகவும் தகுதியானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பினாலன்றி அதற்கென அதிகளவில் ஷாம்பெயின் வாங்க வேண்டாம்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரஷ்ய அதிதீவிர தேசியவாத அரசியல்வாதியான விளாதிமிர் ஷிரினோவ்ஸ்கி, டொனால்ட் டிரம்பின் வெற்றியால் மிகவும் உற்சாகமடைந்தார். இந்த வெற்றி அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மாற்றுமென்று அவர் உறுதியாக நம்பினார்.

இதை அவர் ரஷ்ய நாடாராளுமன்றத்தின் கீழவையான டுமாவில் கேமராக்களுக்கு முன்பாக 132 ஷாம்பெயின் பாட்டில்களை திறந்து கொண்டாடினார். இதுபோலக் கொண்டாடியது அவர் மட்டும் அல்ல.

டிரம்ப் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்ற ஆச்சர்யமான வெற்றிக்கு அடுத்த நாள், ரஷ்யா அரசின் தொலைக்காட்சி சேனலான ஆர்.டி.யின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன், தனது கார் ஜன்னலில் அமெரிக்க கொடியுடன் மாஸ்கோவை சுற்றிவர விரும்புவதாக ட்வீட் செய்திருந்தார்.

டிரம்பின் வெற்றியைக் கொண்டாட தான் ஒரு சுருட்டு புகைத்ததாகவும், ஒரு பாட்டில் ஷாம்பெயின் குடித்ததாகவும் ஒரு ரஷ்ய அதிகாரி சொன்ன தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை டிரம்ப் நீக்குவார் என்ற எதிர்பார்ப்புகள் ரஷ்யாவில் அதிகமாக இருந்தது. யுக்ரேனில் இருந்து பிரிக்கப்பட்ட கிரைமியன் தீபகற்பம்கூட ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது.

“டிரம்பின் சிறப்பு என்னவென்றால், அவர் ரஷ்யாவில் மனித உரிமைகள் குறித்து ஒருபோதும் பிரசங்கம் செய்யவில்லை” என்கிறார் ’நெசவிசிமயா கெஸெட்டா’ செய்தித்தாளின் உரிமையாளரும் தலைமை ஆசிரியருமான கான்ஸ்டான்டின் ரெம்சுகோவ்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

அதிபர் புதின் ஆதரவு யாருக்கு?

“அந்த நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக டிரம்ப் கடுமையான தடைகளை விதித்தார்,” என்று ரெம்சுகோவ் நினைவு கூர்ந்தார். மேலும், டிரம்பின் பதவிக் காலம் பலருக்கும் ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் கூறினார்.

அதனால்தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிகாரிகள் இரண்டாவது முறையாக டிரம்ப் பதவிக்கு வருவது பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு விளாதிமிர் புதின் தனது ஆதரவை அளித்துள்ளார். இருப்பினும் புதின் அளித்த இந்த ஆதரவை “ரஷ்யா கேலி செய்வதாக” (ட்ரோலிங் செய்வதாக) பரவலாகக் கூறப்பட்டது.

கமலா ஹாரிஸின் ‘வசீகரமான’ சிரிப்பு தனக்குப் பிடித்திருப்பதாக புதின் கூறினார். ஆனால் பிரசாரத்தின் போது கமலா ஹாரிஸ் அல்ல, டிரம்ப் கூறியதுதான் புதின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் ஓர் அனுபவமிக்க அரசியல் பண்டிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவியின் அளவைப் பற்றிய டிரம்பின் விமர்சனம், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு புதினை குற்றம் சாட்டுவதில் காணப்பட்ட அவரது தயக்கம் மற்றும் அதிபர் விவாதத்தின்போது யுக்ரேன் போரில் வெற்றி பெற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் கூற மறுத்தது ஆகியவை இதற்கான உதாரணங்கள்.

  • அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் எழுச்சி பெற்றது எப்படி?30 அக்டோபர் 2024
  • டெல்லி அரியணைக்காக அக்பருக்கு எதிராகவே கிளர்ச்சி செய்த மகன் ஜஹாங்கீர் – என்ன நடந்தது தெரியுமா?30 அக்டோபர் 2024
அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

இதற்கு மாறாக யுக்ரேனுக்கு ஆதரவு அளிப்பது அமெரிக்காவின் “மூலோபாய நலனுக்கு” ஏற்றது என்று கமலா ஹாரிஸ் வாதிட்டார். கமலா ஹாரிஸ் புதினை “கொலைகார சர்வாதிகாரி” என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய அரசு தொலைக்காட்சியும் அவரைப் பற்றி அவ்வளவாக பாராட்டிப் பேசவில்லை. கேலியாகப் பேசக்கூடிய ரஷ்யாவின் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு, கமலா ஹாரிஸின் அரசியல் திறன்களை முற்றிலும் நிராகரித்தார். கமலா ஹாரிஸ் டிவி சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதான் நல்லது என்று அவர் பரிந்துரைத்தார்.

ரஷ்யாவுக்கு இருக்கும் சாதகமான சூழல்

ரஷ்யாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கக்கூடிய மற்றொரு முடிவு – மிகவும் நெருக்கமான தேர்தல், அதைத் தொடர்ந்து வரும் அதன் முடிவுகள். அமெரிக்காவில் தேர்தலுக்குப் பிறகு குழப்பம் நிலவும் பட்சத்தில் யுக்ரேன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு அந்த நாட்டிடம் குறைவான நேரமே இருக்கும்.

பராக் ஒபாமாவின் கீழ் அமெரிக்க-ரஷ்யா உறவுகள் மோசமடைந்தன, டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் கீழ் அது மிக மோசமான நிலைக்குச் சென்றன. ஜோ பைடன் ஆட்சியின் கீழ் இது ‘மிகவும் மோசமடைந்து வருகின்றன’ என்று வாஷிங்டனுக்கான ரஷ்ய தூதரக அதிகாரியான அனடோலி அன்டோனோ குறிப்பிட்டார்