650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

0
168

பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 04-ம் திகதி நடைபெறுவதையொட்டி நேற்றையதினம் கலைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார்.

இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் முன்கூட்டியே ஜூலை 04-ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.

இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதனால் 650 எம்.பி.க்கள் பதவி வெற்றிடமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.