ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?

0
206

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது.

முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நிலவரம் என்ன?

முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது.

திமுக – 7,961 வாக்குகள்

நாதக – 1081 வாக்குகள்

வித்தியாசம் – 6,880 வாக்குகள்

இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என்றும், மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது.