கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது

0
143

கணேமுல்ல சஞ்சீவ’ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தற்போது வழக்கறிஞர் வேடத்தில் வந்து கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர்.

அதன்படி, குறித்த முக்கிய சந்தேக நபர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர் புத்தளம், பாலாவியா பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் , முகமது அஸ்மான் ஷெரிப்தீன் 34 வயதுடையவர்.