நானுஓயாவில் மணல் ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து!

0
200

மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4.00 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதி வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன்,பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணலை அகற்றி வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வந்தனர்.

விபத்தின்போது லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகிறது