வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் 35,875 குடும்பங்கள் காணப்படுகின்றன.அதில் 4,771 குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தை அடிப்படையாக கொண்டு காணப்படுவதாக வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களில் அதிகமானோர் நிரந்தர வேலையற்றோர் என தெரிய வந்துள்ளது.
அத்துடன் பெரும்பான்மையான பெண்களின் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களில் உள்ள கணவர்கள் போர் காலத்தில் உயிரிழந்துள்ளனர் எனவும் ஏனையோர் பல்வேறு நோய் காரணமாக இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





