நேற்றைய தினம் கொரொனா தொற்று காரணமாக 18 பேர் உயிரிழப்பு

0
336

நேற்றைய தினம் 18 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் பதிவான உயிரிழப்புக்கள் வதுரப,இமதுவ,வலஸ்முல்ல,மத்துகம,மெல்சிரிபுர, குருநாகலை,அலவ்வ,மொறன்துடுவ,ஓமல்பே,எம்பிலிபிடிய,அல்தடுவன,கந்தகெதர,பசரை,கொழும்பு 05 வவுனியா,தல்கஸ்வல மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

அத்துடன் குறித்த 18 உயிரிழப்புக்களில் 11 உயிரிழப்புக்கள் கொவிட் நிமோனியா காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 12 பேர் ஆண்களும் 06 பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.