இரவு வேளையில் 200 மி.மீ வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

0
1054

இன்றைய தினம் இரவு வேளையில் நாட்டின் சில இடங்களுக்கு 200 மி.மீ வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகிய காரணத்தினால் குறித்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தென்,மேல்,சப்ரகமுவ,வடமேல் ஆகிய மாகாணங்களில் தற்பொழுது நிலவும் மழைவீழ்ச்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரையான காலப்பகுதியில் காலி மாவட்டத்தின் ஹினிதும பிரதேசத்தில் 190 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.