தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதன்போது பதிவு திருமணங்களை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது.
இருப்பினும் குறித்த பதிவுத் திருமணத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 15 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது விருந்துபசாரங்கள்,களியாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





