கொரோனாவிற்கு மத்தியில் குழந்தைகளிடையே பரவும் புதிய நோய்

0
1285

இந்த நாட்களில் குழந்தைகளிடையே,நாய் மற்றும் பூனைகளிடம் பரவும் டோக்ஸோகாரியாவிஸ் (toxocariasis) எனப்படும் ஒரு வகையான வட்டப்புழு நோய் பரவி வருவதாக,லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாட்களில் குழந்தைகள் அதிகளவில் வீட்டிலேயே இருப்பதனால்,நாய் மற்றும் பூனைகளுடன் தங்களுடைய பொழுதை செலவிடுவதனால்,அந்த விலங்குகளில் பரவும் வட்டப்புழுக்கள், குழந்தைகளிடமும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயானது ஆரம்பக்கட்டத்தில் குழந்தைகளின் தோலில் காணப்படும்.அதன் பின்னர் கண்,மூளை மற்றும் நுரையீரல்களுக்குள் உள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு பூச்சு மருந்து கொடுப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.