தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறிய 1,390 பேர் கைது

0
305

கடந்த 24 மணத்தியாலயங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1,390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகளவானோர் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அங்கு கைதானவர்களின் எண்ணிக்கை 192 ஆக காணப்படுகின்றது.

அத்துடன் மாத்தளை பிரதேசத்தில் 133 பேரும் மற்றும் கண்டியில் 121 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இன்றைய தினம் வரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறிய 38,311 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.