நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடி 21 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவற்றில் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சைனோபார்ம் தடுப்பூசி 80 லட்சம்,அஸ்ட்ரா செனகா தடுப்பூசி 5 லட்சம்,ஸ்புட்னிக் வி தடுப்பூசி 1 லட்சத்து 80 ஆயிரம்,பைசர் தடுப்பூசி 1 லட்சத்து 15 ஆயிரத்து 830 ஆகியவற்றை நாங்கள் கொள்வனவு செய்துள்ளோம்.அதற்கமைய நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்து 59 ஆயிரத்து 930 ஆகும்.72 வீத தடுப்பூசிகளை நாங்கள் வாங்கியுள்ளோம்.இவற்றை கொள்வனவு செய்வதற்கு (கோடி 1546 ரூபாய்) அமெரிக்க டொலர் 77.3 மில்லியன் பணம் செலுத்தியுள்ளோம்.குறித்த பணத்தினை செலுத்துவதற்கு இதுவரை எங்களுக்கு எந்தவொரு பிரச்சினைகளும் ஏற்படவில்லை.எதிர்காலத்தில் சீனாவிலிருந்து நன்கொடையாக சைனோபார்ம் தடுப்பூசிகள் 16 லட்சம் கிடைப்பதற்கு உள்ளது.”
இதற்கிடையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்படாவிட்டால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அவர்கள் தெரிவித்துள்ளார்.





