15 தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்!

0
230

நோர்வூட் ஸ்டொக்ஹோம் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளை 15 தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் காணப்படும் ஒரு பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை பருந்து தாக்கியதில் குளவிகள் கிளர்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.