டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை

0
489

நாட்டின் நீதிமன்ற செயற்பாடுகளை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை கொண்டு முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப நடவடிக்கையாக காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கின் செயற்பாடுகள் முந்தைய நாள் 18 ஆம் திகதி 107,110,205 ஆகிய இலக்கம் கொண்ட அறைகளில் ஆரம்பிக்கப்பட்டன.

அத்தடன் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து இணையத்தின் ஊடாக தேவையான தொடர்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி மூலம் சிறைக்கைதிகளை மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மற்றும் குறித்த செயந்பாடுகள் அனைத்தும் லங்கா கவர்ண்மட் நெட்வர்க்கின் கீழ் தற்பொழுது 28 சிறைச்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.