8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புக்கள் துண்டிப்பு

0
193

ஒரு வருட காலப்பகுதியில் மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய 08 இலட்சம் பேரின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற குழுக்கூட்டத்திலேயே மேற்குறித்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இணைப்புக்களில் பெரும்பாலானவை ஏழை மக்களது இணைப்புக்கள் என்பது தெரியவந்துள்ளது.துறைசார் கண்காணிப்புக்குழு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த மின்துண்டிப்பினால் குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.