இம்மாதம் 3 ஆம் திகதி கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரிதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவமானது கொழும்பின் தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் என கூறி ஒரு குழு தம்மை அடையாளப்படுத்தி விசாரணை பேரின் வீட்டை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 500,000 லட்சம் வரை கொள்ளையடித்த பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழிலதிபரின் வீட்டிலேயே 4 சந்தேக நபர்கள் இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் கொள்ளையர்கள் வீடுகள் அல்லது வியாபார நிலையங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் இதனால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசேட சந்தர்ப்பங்களை தவிற ஏனைய சந்தர்ப்பங்களில் பொலிஸ் வாகனங்களில் வருவார்கள் என்றும் அதிகாரிகள் சில இடங்களை ஆய்வு செய்வதற்கு முன்னர் முறையான அறிமுகத்தை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த காலப்பகுதியிலும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் என தெரிவித்து எவரேனும் வருகை தந்தால் அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை கோர பொதுமக்களுக்கு உரிமை உண்டு என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.





