
மன்னன் அதியமான் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்ற ஆசையினால் ஒளவைப் பிராட்டியார் நெல்லிக்கனியை வழங்கியதாக கதையொன்றும் உண்டு.
இத்தகைய பெருமைக்குரிய நெல்லிக்கனியின் உபயோகம் பலரும் அறியாமல் இருக்கலாம்.அதைப்பற்றி ஆராய்வோம்.
உடலின் அதிக உஷ்ணத்தை தனித்து குளிர்ச்சியை உண்டாக்க நெல்லி ஓர் அருமருந்தாகும்.மேலும் இக் கனியில் அடங்கியுள்ள விட்டமின்கள் பல்வேறு நோய் தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்கின்றது.
நெல்லிக் கனியை தொடர்ந்து உண்டு வரும் பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் நோய்கள் அற்றுப்போகும்.
நெல்லிசச்சாற்றுடன் ரோஜா இதழ்களை கலந்து உட்கொண்டு வந்தால் தாய்மை பேறு பெற்றுள்ள மகளிர் நல்ல உடல் நலத்தை பெறுவர்.இரத்தச் சோகை நீங்கும், இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.கருவில் உள்ள குழந்தைக்கும் நற்பலன் கிட்டும்.
நெல்லிப்பொடி கலந்த பயற்றுப் பொடியை தினமும் தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்புடனும் பொலிவாகவும் காட்சியளிக்கும்.
மருந்துகள் எதையும் பயன்படுத்தாமல் நம் உடலிலுள்ள இரத்தத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நெல்லிக்கனியை அடிக்கடி உட்கொள்ளுவது போல் வேறு எதுவுமில்லை.
வேறு எந்த காய் கனியிலும் இல்லாத அதிசயம் நெல்லிக்கனியில் உள்ளது.





